மீனம் ராசிக்கு…! புத்துணர்ச்சி ஏற்படும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பிறருக்கு உதவி செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு அதிக நாட்டம் செல்லும்.

நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல பணவரவு கிடைக்கும். உங்களுக்கு நல்ல எண்ணங்கள் பிரதிபலிக்கும். இன்று உங்களுக்கு நேர்மையான எண்ணம் வரும். தானம் தர்மம் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. சில நபர்கள் உங்களின் கோபம் படுத்தும் படி நடந்து கொள்வார்கள். வெயிலில் நீங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களில் தடை தாமதங்கள் வரக்கூடும் அதனை உடைத்து தான் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் செயல்களில் உற்சாகமாக ஈடுபட வேண்டும். நீங்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவு பெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். குடும்ப பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் வீண் செலவைத் தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் மற்றும் பழைய சொத்துக்கள் உங்கள் கையில் வந்து செய்யக்கூடிய யோகம் உள்ளது. இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் வாங்குவது விற்பது எளிதாக இருக்கும். இன்று நீங்கள் ஓரளவு லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.
நீங்கள் இன்று பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். சகோதர சகோதரிகளிடம் நீங்கள் ஒற்றுமையைப் பேணவேண்டும். இன்று உங்களுக்கு எதிரிகள் தொல்லை ஏதும் இல்லை.
இன்று நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால் பிரச்சினைகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே எந்த ஒரு பெரிய பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை, சமூகமாகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி ஏற்படும் நாளாக உள்ளது. இன்று உங்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் விளையாட்டுத் துறையிலும் முன்னேற வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 1மற்றும் 4. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.