துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! நிம்மதி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனைவியின் மூலம் உங்களுக்கு வருமானம் கிட்டும்.

உங்கள் குழந்தையின் மீது உங்களுக்கு அளவற்ற பாசம் ஏற்படும். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பீர்கள். அவர்களுடைய கல்வி செலவு இன்று காத்திருக்கிறது.
இன்று உறவுகளுடன் மனவருத்தம் ஏற்பட்டாலும் அது பின்னர் சரியாகிவிடும். சில உறவுகள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். மறைமுக எதிர்ப்புகளை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். மறைமுகமாக சிலர் உங்களை குறை கூறினாலும் பின்னர் அவர் தவறுகளை உணர்வார்கள். காரியம் அனுகூலத்தை உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய நல்ல மனதிற்கு இன்று கண்டிப்பாக நல்லதே நடக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை ஏற்படும். வாகனங்களை நீங்கள் இன்று பொறுமையாக ஓட்டுவது நல்லது. ஆபரணங்களையும் சரிபார்த்துக் கொள்வது சிறந்தது. இன்று தெய்வத்திற்கு சிறு தொகை செலவிட நேரிடும். இன்று சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பார்கள்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். சில விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. இன்று நீங்கள் அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள்.
இன்று நீங்கள் யாரிடமும் கடன் வாங்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். நீங்கள் உழைப்பது பெரிதில்லை நீங்கள் உங்கள் உடலை முதலில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியமாகும். நீங்கள் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவது சிறந்தது.
நீங்கள் யாருடைய பிரச்சினையிலும் தலையிடாமல் இருப்பது மிகவும் சிறந்தது.
அதேபோல் நீங்கள் தயவுசெய்து யாரிடமும் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறந்தது.
ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனமுடன் கையாள வேண்டும். காதலில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக ஆலோசித்து பின்னர் முடிவுகள் எடுக்க வேண்டும்.‌ அவசரமான முடிவுகளை மட்டும் தவிர்க்க வேண்டும். மாலை நேரத்திற்கு பின்னர் சில சிக்கல்கள் சரியாக கூட வாய்ப்புகள் உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு எதிலும் துணிச்சல் ஏற்படும்.‌ கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.