விருச்சிகம் ராசிக்கு…! அனுபவம் கிடைக்கும்…! ஆதரவு பெருகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது பயணத்தில் கூட நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். பிறர் குறை கூற வண்ணம் நீங்கள் உங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைந்தே காணப்படும். அதனால் நீங்கள் அவசரப்பட்டு எவ்விதமான வார்த்தையும் பேச வேண்டாம்.
யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது சிறந்தது. வாய்வு ஏற்படுத்தும் எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இன்று மனம் மகிழும் சம்பவங்கள் கூட இல்லத்தில் நடைபெறும். உங்கள் முயற்சிகள் சாதகமான பலன் கிட்டும். இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். விழிப்புடன் இருப்பது சிறந்தது. தேவையில்லாத வீண் செலவுகளை கட்டுக்குள் வைப்பது சிறந்தது. கவனம் இருந்தால் மட்டுமே இன்றைய நாளை நீங்கள் பொன்னான நாளாக மாற்றிக் கொள்ளலாம்.

சில நபர்கள் வேண்டும் என்றே உங்களை கோபப்படுத்த வேண்டும் என்று தோன்றுவார்கள். அவர்களை விட்டு விலகி இருப்பது சிறந்தது. உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நல்ல மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏதும் பெரிதாக இல்லாமல் சமூகமாகவே உள்ளது. பிள்ளைகளுடைய விஷயத்தில் நீங்கள் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பது மிகவும் நல்லது. இன்று மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
இன்று ஞாபகத் திறன் குறைவாக உள்ளதால் நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது.இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் வெள்ளை நிறம்.