ரிஷபம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்…! நம்பிக்கை கூடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும்.

செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம் தாமதமாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். காதலுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்லச்செய்தி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தாலும், சாதுரியமாக அதனை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்லவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றையநாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.