மீனம் ராசிக்கு…! வருத்தம் உண்டாகும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
நீங்கள் செய்யும் செயலில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

இதன்மூலம் பாதுகாப்பின்மை உணர்வை சமாளிக்க முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் சிறிது வருத்தம் காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும். இன்று மனக்குழப்பம் காரணமாக காதல் விஷயத்தில் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று நிதி நிலைமையை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்களின் செலவுகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உணவை சரியான நேரத்தில் உண்ணுங்கள். இதனால் அஜீரண கோளாறை தவிர்க்கமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு. அதிர்ஷ்டமான எண்: 8. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.