நாளைய (17-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம்

17-09-2020, புரட்டாசி 01, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை.

பூரம் நட்சத்திரம் காலை 09.48 வரை பின்பு உத்திரம்.

சித்தயோகம் காலை 09.48 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

மஹாளய அமாவாசை.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

 எம கண்டம்- காலை 06.00-07.30,

 குளிகன் காலை 09.00-10.30,

 சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

நாளைய ராசிப்பலன் –  17.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற செலவு உண்டாகும். உறவினர்களிடம் தேவை இல்லாமல் மனஸ்தாபம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் உண்டாகும். சிக்கனமாக இருந்தால் பண செலவு குறையும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் எதிரிகளால் தேவையற்ற பிரச்சினையை சந்திக்க நேரிடும். வீட்டில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். தொழிலில் உடனிருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் உறுதுணை கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும்.உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மின் செலவு நேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறாது.உத்யோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது. உத்யோகத்தில் சிறுசிறு மாற்றங்களால் லாபம் உண்டாகும். பணப்பற்றாக்குறை குறையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மன அமைதி உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோக ரீதியில் வங்கி கடன் கிடைக்கும். பெரியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளி பயணங்களால் நட்பு கூடும்.

கன்னி

உங்களின் ராசிக்கு தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க தாமதமாகும். வீட்டில் அமைதி பெருகும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் இடையூறு வரும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை தொழிலை வளர்க்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள் அதுவே உத்தமம்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சீராக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நிறைவேறும். உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நல்ல செய்தி வரும். நண்பர்களின் ஆலோசனை வியாபாரத்தை பெருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உறவினர்களால் நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக நடக்கும். தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சுப பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். பண வரவு அமோகமாக இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பகல் 03.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் கொள்ளுங்கள். மதியத்திற்கு பிறகு மன உறுதி கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு செய்ய நேரும். பகல் 03.07 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும் கவனமாக செய்யுங்கள். மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். தொழிலில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருங்கள் அதுவே நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு தொழில் சிறப்பாக இருக்கும். வீட்டில் ஒற்றுமை நிலவும். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலம் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *