நாளைய (14-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

14-01-2021, தை 01, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.02 வரை பின்பு வளர்பிறை துதியை.

 திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு அவிட்டம்.

 நாள் முழுவதும் சித்தயோகம்.

 நேத்திரம் – 0.

 ஜீவன் – 0.

 சந்திர தரிசனம்.

 ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.

 உத்தராயண புண்யகாலம் ஆரம்பம்.

 பொங்கல் பண்டிகை.

 கரி நாள்.

 பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.00 முதல் 11.00 வரை மதியம் 01.00 முதல் 01.30 வரை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

 எம கண்டம்- காலை 06.00-07.30,

 குளிகன் காலை 09.00-10.30,

 சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

நாளைய ராசிப்பலன் –  14.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் விருப்பம் நிறைவேறும். பெரியவர்களின் நட்பு உண்டாகும்.உற்றார் உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நண்பர்கள் ஆலோசனை நல்ல பலனைக் கொடுக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீண் செலவு இருக்கும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு மன குழப்பம்  இருக்கும். உடல்நிலை மந்தமாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.வீட்டில் சுபகாரிய முயற்சி செய்யாமல் இருக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் சுப செய்தி இருக்கும். உற்றார் உறவினர்கள் நட்பாக இருப்பார்கள். வெளி பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு வியாபாரத்தில் நல்ல முயற்சி இருக்கும். புதிய முயற்சிகளுக்கு வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி இருக்கும். சேமிப்புகள் உயரும்.

கன்னி

உங்கள் இராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவும் இருக்கும். வீட்டில் பெரியவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் இருக்கும். நண்பர்கள் வழியில் மன சங்கடம் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லதை கொடுக்கும். உறவினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள்.எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிக்க வேண்டும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி சேமிப்பு உயரக்கூடும். பொன்னும் பொருளும் சேரும்.

தனுசு

உங்கள் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க இடையூறு இருக்கும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் சற்றே நீங்கும். உங்களின் முயற்சிகளுக்கு உதவினால் ஆதரவாக இருப்பார்கள். சுப செய்திகள் கிடைக்கும்.

மகரம்

உங்கள் ராசிக்கு தன வரவு அமோகமாக இருக்கும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமை நீங்கும்.நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.  சுப காரியம் கைகூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் கூட தாமதத்தில் முடியும். குழந்தைகளால் மன கஷ்டம் இருக்கும். உடல் நிலையில் கவனம் வேண்டும்.வியாபாரத்தில் இருந்த பிரச்சனை நீங்கும்.கூட்டாளிகளின் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

உங்கள் ராசிக்கு வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லக் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *