மகரம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! பணவரவு வரும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! தேவைக்கு அதிகமாக இன்று பணம் சேரும்.

பணம் சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வாக்குவன்மை வளம் பெருகும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது மனதிற்கு நிம்மதியை தரும். கணவன் மனைவி இடையே இடைவெளி குறைய மனம் விட்டுப் பேச வேண்டும். உங்களின் செயலில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வீக பக்தி கூடும். ஆன்மீக நாட்டம் செல்லும்.கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணம் இருக்கும். பழைய பாக்கி வசூலாகி மனதை ஆனந்தப்படுத்தும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உணவு விஷயத்தில் சரியான நேரம் முக்கியம். நேரத்திற்கு தூங்கச் செல்வது நல்லது.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும்.மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.