விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி இருக்கும்…! சொல்லை நிறைவேற்றுவீர்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நவீன பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும்.

வெளியூர் பயணம் வெற்றிகரமாக அமையும். வாழ்க்கையில் புது முன்னேற்றம் உருவாகும். தெய்வ பக்தியாலும் மனதில் நிம்மதி கூடும்.உத்தியோகத்தில் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். கணவன் மனைவி இடையே கருத்துவேற்றுமை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவை இல்லாத பேச்சு இடம் கொடுக்க வேண்டாம். வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. வாழ்க்கையில் நல்ல திருப்பம் அடைய இறைவனின் அருள் இருக்கும். பயணங்கள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். வெற்றி வாய்ப்பை எளிதில் ஈட்டி கொள்வீர்கள். தனவரவு இருக்கும். யாரையும் நீங்கள் முழுமையாக நம்பவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பொழுது எண்ணிப் பார்த்து வாங்க வேண்டும். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்லை சுமுகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.

மாணவ செல்வங்கள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும் நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.