ரிஷபம் ராசிக்கு…! மனநிம்மதி ஏற்படும்..! தொல்லைகள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும்.

எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்பட வேண்டும். பெரியோர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும்.

பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவேண்டும். பணவரவு சீராக இருக்கும். வாகன யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.