மீனம் ராசிக்கு…! ஒற்றுமை இருக்கும்…! பணவரவு இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! தைரியத்தோடு செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும்.

தைரியமாக எதையும் நீங்கள் அணுக வேண்டும். தனவரவு போதுமானதாக அமையும். நூதன பொருட்சேர்க்கை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். மின் செலவைக் கட்டுப்படுத்தி விட்டால் ஆனந்தமாக இருக்கும். எதையும் சமாளிக்கும் திறமை இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். மனதில் அதிருப்தியான சூழல் எப்பொழுதும் இருக்கும். மனதில் ஏதோ ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். கனவுகளால் தொல்லை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சரியான நேரத்திற்கு தூங்க முடியாது. உடல்வலி உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினையும் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யாரையும் நீங்கள் பகைத்துக்கொள்ள வேண்டாம். தேவையில்லாத வீண் பழி உங்கள் மீது சுமத்துவார்கள். குடும்பத்தாரின் அன்பு பரிபூரணமாக இருக்கும்.

கணவன் மனைவி இருவருக்கும் சுமுகமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமாக போக்கு வெளிப்படும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பிரவுன் மற்றும் பச்சை நிறம்.