தனுசு ராசிக்கு…! கடன் பிரச்சனை சரியாகும்…! கர்ம வினை நீங்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாள் முற்றிலும் நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.

நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பெற்றோரின் உடல் எடையில் அக்கறை காட்ட வேண்டும். திருமணம் தொடர்பான பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். சாதகமான பலன் உங்களை தேடி வரக்கூடும். வீடு வாகனம் மனை வாங்கும் பொழுது யோசித்து வாங்க வேண்டும். எந்த விஷயத்திலும் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வம் அதிகமாக இருப்பதால் காரியம் நல்லபடியாக நடக்கும். புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். பிரச்சனைகளை சாதுரியமாக சமாளித்து செல்வீர்கள். பணப் புழக்கம் திருப்தி தரும் வகையில் அமையும். சமூக அக்கறையுடன் எந்த வேலையிலும் ஈடுபடுவீர்கள். மதிப்பும் மரியாதையும்  அதிகரிக்கும். மிக முக்கியமாக உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.  கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எந்த ரகசியத்தையும் யாரிடமும் பகிர வேண்டாம்.

காதலில் உள்ளவர்களுக்கு நிதானமாக போக்கு வெளிப்படும். மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு இரு முறை சிந்தனை செய்ய வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்திலே நெய் தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான  அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் நீல நிறம்.