நாளைய (22-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

22-12-2020, மார்கழி 07, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.15 வரை பின்பு வளர்பிறை நவமி.

 உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.37 வரை பின்பு ரேவதி.

 அமிர்தயோகம் பின்இரவு 01.37 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 1.

 ஜீவன் – 1/2.

 முருக – பைரவர் வழிபாடு நல்லது.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

நாளைய ராசிப்பலன் –  22.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சி அனைத்திலும் தாமத நிலை இருக்கும்.தொழிலில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு இருக்கும். நண்பர்கள் மூலம் உதவி உண்டாகும்.உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும். கடன் தொல்லை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வம் இருக்கும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்க வாய்ப்பு உண்டு. பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை அமைதி இருக்கும். சுப பேச்சுவார்த்தை நல்ல முடிவை கொடுக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். புதிய வாகனம் வாங்கி மகிழக் கூடும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் போட்டி பொறாமை நீங்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மன உறுதியோடு இருந்தால் மட்டும் பிரச்சனைகள் தீரும். பெரியவர்களால் சிறு மனஸ்தாபம் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் இருக்கும். செய்யும் வேலைகளில் கால தாமதம் இருக்கும்.உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கவனம் அவசியம்.

கன்னி

உங்களின் ராசிக்கு பண வரவு அமோகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்க ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் ஒற்றுமை இருக்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். திடீர் பணவரவு இருக்கும். கடன் தொல்லை தீரும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து இருக்கும். உறவினர்களால் நல்ல செய்தி உண்டாகும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். கடன் தொல்லை தீரும். நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக தான் அமையும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் இருக்கும்.உத்தியோக வளர்ச்சியில் நீங்கள் வளர்ச்சி அடைய உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வியாபாரம் சீராக இருக்கும்.புதிய வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் முயற்சி இருக்கும்.குழந்தைகள் படிப்பு விஷயத்திற்காக வெளியூர் செல்ல கூடும். வெளிவட்டார நட்பு நல்ல பலனைக் கொடுக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்பு அமையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடலில் சற்று சோர்வும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் வீண்செலவு இருக்கும். மதி நுட்பமாக செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு இனிய செய்தி வீடு வந்து சேரும். உற்றார் உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.உத்யோகத்தில் புதிய சலுகைகள்  அறிமுகப்படுத்தி லாபம் உண்டாகும். உடல்நலம் சீராக அமையும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். சேமிப்புகள் உயரக்கூடும்.