மகரம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்…! முயற்சி உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும்.

மனதில் பூரண திருப்தி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும்  தெளிவு இருக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகி செல்லும். வாகன யோகம் போன்ற ராஜயோகம் கிடைக்கும். வீடு மனை வாங்க போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும். செயல்பாடு அனைத்தும் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். இனிய பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுற்றுலா சென்று வரலாமா என்ற திட்டம் தீட்டுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும். செயலில் வேகம் கூடும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி இருக்கும்.வெளிநாடு சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  தனவரவு இன்று இருக்கும். மேலதிகாரிகளின் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை மதித்து நடக்க வேண்டும். வாக்குவாதம் எதையும் செய்யக்கூடாது. தாய் தந்தையருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.

கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் பிரச்சனை எதுவும் இல்லை.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான முக்கியமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மட்டும் நீல  நிறம்.