விருச்சிகம் ராசி அன்பர்களே…! புதிய தொழில் முயற்சிகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு போஜனம் கிடைக்கும். அரசால் அனுகூலம் இருக்கும். வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டி கொள்வீர்கள். சிக்கல்களை சிறப்பாக தீர்த்துக் கொள்வீர்கள். உறவினருக்கு உதவிகளையும் செய்து கொடுப்பீர்கள். அனைவரின் மீது அன்பு கொள்வீர்கள். பிரச்சினையில் தீர்வு காண முயல்வீர்கள். கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தாலும் மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகும். குழந்தைகள் அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள்.தேவையில்லாத இடங்களில் பேச்சைக் கட்டுப்படுத்த பாருங்கள். மனதில் சஞ்சலம் உண்டாகும். முயற்சிகள் ஓரளவு பலிக்கும். தாய் தந்தையருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். வாழ்க்கையில் சின்ன சின்ன தடைகள் இருக்கும் அதை நினைத்து வருந்த வேண்டாம். இறைவனின் அருள் இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.