தனுசு ராசிக்கு…! அனுசரனை தேவை..! திட்டமிடுதல் அவசியம் ..!!

தனுசு ராசி அன்பர்களே…! சிக்கல் தீர்ந்தது சிறப்படையும் நாளாக இருக்கும்.

பரிபூரணமான இறைவன் அருள் பக்கபலமாக இருக்கும். அனைவரின் பார்வை உங்கள் மேல் படும்படி திறமை வெளிப்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சிறிய தொல்லை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் பண தட்டுப்பாடு பிரச்சினை எழக்கூடும். நிதானமாக செயல்படுவீர்கள். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். தொழிலில் போட்டிகள் ஏதுமில்லை. விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கு ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Leave a Reply