ரிஷபம் ராசிக்கு…! கவனம் தேவை..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.

சாமர்த்தியமான பேச்சே லாபத்தை கொடுக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். வரன்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னேற்றம் தரும் வகையில் இன்றையநாள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.