“தோனி எப்போது ஒய்வு பெறுவார்?” கணித்து கூறுகிறார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!

தோனி இப்போதைக்கு ஓய்வு பெறுவது சாத்தியமில்லை என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியுள்ளார். 

சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டு இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன் . இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறும் அணிகள் மற்றும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும்  என்று சொன்னது போலவே நடந்தது. ஆனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி  ஓய்வு குறித்து பல்வேறு விவாதங்கள் சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

Image result for Balaji Hassan

ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்புப்படி “தோனி இப்போதைக்கு ஓய்வு பெறுவது சாத்தியமில்லை என்றும், அவருக்கு ஜாதகப்படி லக்னாதிபதி தனுஷ் இருப்பார். அந்த தனுசு ராசி இருக்கும் வரை அவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அக்டோபரில் குரு பெயர்ச்சி ஆகிறார். ஆகையால் வருகின்ற 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதம்  ஓய்வை அறிவிப்பார். இல்லையென்றால் 2020- ஆம் ஆண்டு அக்டோபரில் தான் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.