ஆஸ்திரேலியாவுக்கு எதிராக …அதிரடி ஆட்டத்தை காட்டிய …வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு …!!!

கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு , எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2- 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக  இந்தப்போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ,இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி, மிக சிறப்பாக விளையாடி ,இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.இந்த போட்டியில் பங்குபெற்ற , இளம் வீரர்களுக்கு மஹிந்திரா  சேர்மனான  ஆனந்த் மஹிந்திரா , இந்திய அணியை வெற்றியடைய செய்த, வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இவர் அறிவித்தபடி  6 இளம் வீரர்களுக்கு ,அவர்கள் வசிக்கும் இடத்திலுள்ள, தன்னுடைய நிறுவனத்தின் ஷோரூம் மூலமாக கார் பரிசாக வழங்கப்பட்டு வந்தது . இதன்படி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த, டி. நடராஜனுக்கு சில தினங்களுக்கு முன் கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ,மற்றொரு வீரர் வாஷிங்டன் சுந்தர் நேற்று கார் பரிசை பெற்றுக் கொண்டார். அவர் வசிக்கும் சென்னையிலுள்ள, நந்தனத்தின் ஷோரூமில் அவருக்கு மஹிந்திரா மண்டல செயலாளரான வி. ஹரி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.