ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் (வெள்ளி, வெண்கலம்) கிடைத்துள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ். ஏற்கனவே 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்த நிலையில், 800 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளி வென்றார் ஹர்மிலன். ஹர்மிலன் பெயின்சின்  தாயார் 2002 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கல பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் கிரேக்கோ ரோமன் பிரிவில் 2010 க்கு பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப் பட்டியலில் 76 பதக்கங்களை வென்று இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.  ஆசிய விளையாட்டு போட்டியில் 16 தங்கம், 28 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.