சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தடை தாண்டும் ஓட்டத்தில் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கல பதக்கம் வென்றார்.