அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு …. பதிலடி கொடுத்த இயான் சேப்பல் …!!!

அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்திற்கு , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்  இயான் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக , தமிழக வீரர் அஸ்வின் இருந்து வருகிறார். தற்போது இவர்  டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 409 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதோடு  59 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவருடைய சிறந்த பந்துவீச்சாகும். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அதோடு அதிக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில்  அஸ்வின் 4-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் அஸ்வின் குறித்து , இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை.

அதோடு கடந்த 4 ஆண்டுகளில் ,அஸ்வினுக்கு இணையாக ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தும்  திறமையை பெற்றுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினை விட ,அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அஸ்வினை எல்லா காலகட்டத்திற்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில், எனக்கு பிரச்சினை இருப்பதாக”, அவர் கூறினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ,வர்ணனையாளருமான இயன் சேப்பல்,  மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு  பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்திய அணியில் அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் . அவர் ஆஸ்திரேலிய வீரரான   நாதன் லயனை விட  சிறந்த வீரர் ஆவார். ஆனால் அவர் அதிக முறை ஐந்து விக்கெட்டிற்கு மேல் கைப்பற்றி உள்ளாரா  ? என்னைப் பொறுத்தவரையில், அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார் “, என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *