கழுத்தை அறுத்துக்கொண்டு….. இரத்தம் சொட்ட சொட்ட….. போதை ஆசாமியின் மிரட்டல்…!!

நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து போதையில் இருந்த  அந்த இளைஞர் காவலர்களை பார்த்து கிட்டவா , கிட்டவா என்று கூறிக் கொண்டே என் வண்டிய கொடு  , நான் தப்பு செஞ்சேன்,  எதுக்கு என்ன பிடிச்ச ,  SP ஆபீஸ் ல புகார்  தருவேன் , சரக்கு விக்கிறவனா பிடி என்று கூறி அந்த இடமே பரபரப்பாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *