ஜனவரி 30 முதல் அசைவ உணவிற்கு தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான உத்தரவு….!!!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக பறவைகள் பறந்து வரும் என்பதால் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை அசைவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மீன், கோழிக் கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கண்டிப்பாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்காக பொருந்தும். இதற்கிடையில் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது விமாப்படை விதிப்படி நடவடக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.