“மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்” முத்தலாக் குறித்து அசாதுதீன் ஒவைசி விமர்சனம்…!!

முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்  என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள  பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய அநீதியாக அமையும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அசாதுதீன் ஒவைசி , இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் முஸ்லிம் 3 ஆண்டு சிறை தண்டனையும் , முஸ்லீம்  அல்லாதவர் 1 வருடம் சிறைக்குச் தண்டனையும் அனுபவிப்பது எந்த வகை நியாயம். இந்த சட்டத்தால் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க சொல்லுகின்ற இந்திய அரசு , திருமணமும் அப்படியே இருக்கும் என்பது எந்தவகை நியாயம் பிரதமர் மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.