காலம் போக போக ரஜினி படங்களை மறைந்திடுவாங்க… எப்பயுமே கமல் தான்… சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகர்…!!!!

ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. தற்போது படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார் ரஜினி.

இந்த நிலையில் அண்மையில் பேசிய நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் கூறியுள்ளதாவது, ரஜினியின் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் காலம் போக போக திரைப்படங்களை ரசிகர்கள் மறந்திடுவார்கள். ஆனால் கமல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றது. அன்பே சிவம், குணா உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழில் காலத்தால் அழியாத திரைப்படங்களாக என்றென்றும் ரசிகர் மனதில் நிற்கின்றது. இவரின் இந்த கருத்து தற்போது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave a Reply