அருணாச்சலப் பிரதேசம்… காணாமல் போன 5 இளைஞர்கள்… சீனா சென்றதாக தகவல்..!!

கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து இளைஞர்கள் வழி தவறி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், உப்பர் சுபான்சிரி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக தகவல் வந்தது. மேலும் சீன ராணுவத்தினர் அவர்களை கடத்திச் சென்றதாகவும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் 5 இளைஞர்களும் வழி தவறி சீன பகுதிக்குள் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “இந்திய ராணுவத்தை சேர்ந்த அமைப்பினர் சீன ராணுவத்திற்கு ஹாட்லைன் செய்தி அனுப்பினார்.

அதற்கு பதிலளித்த சீன ராணுவத்தினர் அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து இளைஞர்களும் சீன பகுதிக்குள் இருப்பதாக உறுதிப்படுத்தினர். பின்னர் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறுகையில் “இமாச்சல பிரதேசத்தில் காணாமல் போன 5 இளைஞர்களும், சீன ராணுவத்திடம் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும்” அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *