சேவாக்_கை கொடுத்தவர் ”அருண் ஜெட்லி” டெல்லி கிரிக்கெட் சங்கர்….!!

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் வைக்கப்பட்டதற்கான  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்காததால் இன்று அருண் ஜெட்லி வீட்டிற்கு நேரடியாக சென்ற பிரதமர் மோடி அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் அருண் ஜெட்லி நினைவாக டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற டெல்லி சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. டெல்லி கிரிக்கெட் சங்கர் தலைவர் ராஜட்  ஷர்மா கூறும் போது அருண் ஜெட்லியின் ஊக்கத்தால் , இந்திய அணிக்கு டெல்லியிலிருந்து சேவாக் , கம்பீர் , ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினர்.எனவே கிரிக்கெட் மைதானத்திற்கு அவரின் பெயரை வைக்க முடிவு செய்து வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி இதற்கான விழாவில்  அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.