“3_இல் 2 பங்கு வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்” அருண் ஜெட்லி பேட்டி…!!

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியமைக்குமென்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா என்று உலக நாடுகள் முழுவதும் இந்திய தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பாஜகவின்  கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர்  அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்த போது , நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 110_இல் பங்கேற்று பேசியுள்ளேன். பாஜக கட்சி  கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *