” ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் அருண் ஜெட்லி ” ஓபிஎஸ் பேட்டி..!!

மறைந்த அருண் ஜெட்லி ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மற்றும்  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார்.

Image result for panneerselvam sad

 

இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து  டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல்   கொண்டு வரப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கட்சி தலைமையகத்தில் அருண்ஜெட்லிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Image result for panneerselvam, arun jaitley

 

அப்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “மறைந்த அருண் ஜெட்லி ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அருண் ஜெட்லியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.