கலக்கல் கூட்டணி…. உதயநிதி படத்தில் இணையும் அருள்நிதி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கண்ணே நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிக்கிள் 15 தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் இப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரான அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆகையால் அருள்நிதி மற்றும் உதயநிதி ஆகியோர் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்திற்கான எதிர்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *