இதற்கு அனுமதி இல்லை….. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசின் விதி முறைகளை மீறி பட்டாசுகளை தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பட்டாசு ஆலையை சோதனை செய்தபோது விதிமீறல் நடந்தது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு ஆலையின் உரிமையாளரான ராமலட்சுமி மற்றும் போர்மெனான கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *