புதினுக்கு கைது வாரண்ட்.. சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைதுவாரண்டை பிறப்பித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. போர் விதிகளை மீறி பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி உள்ளது என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் புதின் சட்ட விரோதமாக நாடு கடத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் போர் குற்றத்தை புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு குழந்தைகள் உரிமை ஆணையருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply