“நான் நடிக்க தான் வந்தேன்” இளம்நடிகைக்கு பாலியல் தொல்லை….. இயக்குனர் கைது….!!

சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் ரஞ்சித். இவர் ஒரு shortfilm  இயக்குனர் ஆவார். சமீபத்தில் இவர் வெப் சீரியஸ் ஒன்றை இயக்கி வந்துள்ளார். அதில், ஸ்வேதா என்ற இளம் நடிகை நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் தனது சீரியஸில் நடித்து வந்த நடிகை ஸ்வேதாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் நடிகை ஸ்வேதா, நான் நடிக்க மட்டும்தான் வந்துள்ளேன். நீங்கள் கூறுவதில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும், பலமுறை காதல் செய்யுமாறு வற்புறுத்தியதோடு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த இளம் நடிகை ஸ்வேதா கானத்தூர் காவல் நிலையத்தில் ரஞ்சித் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில், இயக்குனர் ரஞ்சித் மற்றும் மற்றும் அவரது உதவியாளர்களான கார்த்திக், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்கொண்ட விசாரணையில், நடிகை ஸ்வேதாவிற்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ரஞ்சித்தின் உதவியாளர்களை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.