மனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..?

ஒரே திருமண மேடையில் காதலி மற்றும் மனைவிக்கு  தாலி கட்டி திருமண செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தின் பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா . CRPF வீரராக பணியாற்றும் இவருக்கு  திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அணில் பைக்காரா விடுமுறைக்கு ஊர் திரும்பும் போதெல்லாம் அவரின் வீட்டருகே உள்ள அங்கன்வாடி காப்பாளரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலர்களாக நெருங்கி பழக்க ஆரம்பித்தனர்.

தன்னுடைய முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காததால் வீட்டின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவெடுத்து தன்னுடைய மனைவி சம்மதத்தோடு அணில் பைக்காரா காதல் செய்த  அங்கன்வாடி பெண் காப்பாளரை திருமணம் செய்தார். அப்போது திருமண மேடையில்  தனது காதலியையும் , மனைவியை மீண்டும் இரண்டாவது முறையாக தாலி கட்டி திருமண செய்துள்ளார். ஒரே மேடையில் ஒரே நேரத்தில் மனைவி மற்றும் காதலிக்கு தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.