“ராணுவ கல்லூரி சேர்க்கை” கடைபிடிக்க வேண்டிய விதிமுறை…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

டேராடூனில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சேர்வதற்கான தேர்வு சென்னையில் வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு ஆகியவை உள்ளடக்கியது. இதனையடுத்து கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தேர்வுத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். மேலும் நேர்முக தேர்வானது விண்ணப்பதாரர்களின் தனித்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவற்றை ஆராய்வதாக அமைந்திருக்கும்.

இதனையடுத்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற குறைந்தபட்சம் 50% பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகாண்ட், டேராடூன், உத்தரகாண்ட் அஞ்சல் குறியீடு எண் – 248003 என்ற முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அவற்றிற்கான காசோலைகளை ஸ்டேட் பேங்க் ஆப், இந்தியா வங்கி வல்பவன், டேராடூன், வங்கி குறியீடு -01576 உத்தரகண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ஜாதி சான்றுடன் ரூபாய் 550 காண கேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளம் மூலமாக மேற்கூறப்பட்ட பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பு ஆகியவை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து வழங்கப்படமாட்டாது. மேலும் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் விண்ணப்பங்கள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்படும். தனிப்பட்ட முறையில் அச்சடிக்கப்பட்ட, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம்.

அதுமட்டுமல்லாது விண்ணப்பதாரர் 1-7-2022 தேதியன்று 11 அல்லது 12 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-7-2009 தேதிக்கு முன்னதாகவும், 1-1-2011 தேதிக்கு பின்னர் ஆகவும் பிறந்திருக்க கூடாது. கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது 1-7-2022 தேதியில் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவர் ஆகவும் அல்லது 7- ம் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு வருகின்ற 30 -ஆம் தேதி மாலை 5.45 க்கு வந்து சேர வேண்டும். மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *