கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்து செல்ல இராணுவம் அனுமதி …!!

இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துசெல்ல இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்த்தை சார்ந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பேர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமான பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதை தொடர்ந்து பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டு கொல்லப்பட்டு , அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீரில் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதி

இந்நிலையில் இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் பாகிஸ்தான் படை வீரர்கள் ஊடுரு முயற்சி செய்தனர். அதை தடுக்கும் வகையில் சரியான பதிலடி தாக்குதல் கொடுத்த இந்திய ராணுவத்தில் அதிரடி வேட்டையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 7 அந்நாட்டு வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல் இந்திய எல்லை பகுதியில் கிடக்கின்றன. தொடர்ந்து இரு நாட்டு வீரர்களுக்கு சட்டை நடந்து வருவதால் அவர்களின் உடல்களை இந்திய ராணுவத்தை கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து சுட்டு கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கி இருக்கின்றது. உடல்களை கொண்டு செல்லும் போது  முறைப்படி வெள்ளை கொடி ஏந்தி அணுகுமாறு இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.