“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது.

நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 மணி அளவில் அரியலூர்  முதல் கும்பகோணம் வரை இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்கள் கார் மீது வேகமாக வந்து கொண்டிருந்த வேன் ஒன்று எதிரெதிரே மோதியது

இந்த விபத்தில் நித்தியானந்தன் மற்றும் அவர்களது நண்பர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் வேனில் வந்த இவர்களில் 17 பேர் படுகாயம் அடைந்தனர் இச்சம்பவத்தை அறிந்த உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்