40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் , சைதாப்பேட்டை , அடையாறு , குரோம்பேட்டை ஆகிய பகுதியில் மழை பெய்தது.

அதே போல கோடம்பாக்கம் , நங்கநல்லூர் , சோழியங்நல்லூர் , பள்ளியக்காரனை , போரூர் , ராமாபுரம் ,வனசரவாக்கம் ,விருக்கம்பக்கம் ,கே.கே நகர் , அண்ணா நகர் ,அனகாபுத்தூர் , திருவள்ளூர் , திருத்தணி , ஆர்.கே.பேட்டை , மாதாவரம் , செங்குன்றம் , புழல் , அம்பத்தூர் , ஆவடி , மதுரவாயல் , பூந்தமல்லி , பட்டாயிராம் ,பள்ளிப்பட்டு , திருவாலங்காடு உட்பட திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் தாம்பரம் , பெருங்களத்தூர் , வண்டலூர் , முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதே போல வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் , சோளிங்கர் , நெமிலி , தக்கோலம் , பனபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.திருவள்ளூரில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பூண்டியில் 20 சென்டி மேட்டர் மழையும் , திருத்தணி , தாமரைப்பாக்கத்தில் 15 சென்டிமீட்டர் மழையும் , சோழவரத்தில் 13 சென்டிமீட்டர் மழையும் , திரு வாலா ங் காட்டில் 12 சென்டிமீட்டர் மழையும் , பள்ளிப்பட்டு , ஆர்.கே. பேட்டை , குமிடிபூண்டியில் 10 சென்டிமீட்டர் மழை  கொட்டியுள்ளது.சென்னை , திருவாரூரில் இடியுடன் பெய்த கனமழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.