சுக்கு நூறாக நொறுங்கிய கண்ணாடி…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பேருந்து மீது கல்வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணைநல்லூர் நோக்கி புறப்பட்டது. இந்த அரசு பேருந்து கள்ளுக்கடை மூலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

இதுகுறித்து அரசு பேருந்து டிரைவர் திருவெண்ணெநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அரசு பேருந்து மீது கல் வீசிய நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த நபர் ஏமாப்பூர் பகுதியில் வசிக்கும் செல்வகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் இருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் செல்வகுமார் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *