அரையிறுதி வாய்ப்பில் இந்திய அணிக்கு புது சிக்கல் ….! “இதுல இப்படி ஒரு சவால் இருக்குதா” …?

டி20 உலகக்கோப்பை  இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள்  பிராத்திக்கின்றனர்.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது .இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தம் 12 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு தலா 5 போட்டியில் விளையாடும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ‘குரூப் ஏ’ பிரிவில் இங்கிலாந்து ,தென்னாப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா ,வெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசம் மற்றும் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன .அதேபோல் ‘குரூப் பி’ பிரிவில் இந்தியா ,பாகிஸ்தான் ,நியூசிலாந்து ,ஆப்கானிஸ்தான் ,நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் குறைந்தது 3 போட்டியிலாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இன்னும் மீதி 4 போட்டிகள் உள்ளன.

இதில் நியூசிலாந்து அணியை தவிர்த்து ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளை இந்தியா எளிதாக வென்றாலும்  நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இல்லையென்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி தவறவிடும். அதேசமயம் பாகிஸ்தான் ,நியூசிலாந்து அணிகள் இந்தியாவை வீழ்த்தி மீதமுள்ள 3 அணிகளையும் மீண்டும் பட்சத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழையும் .இதனால் இந்திய அணி வெளியேற வாய்ப்பு உள்ளது . இதன் காரணமாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் நியூசிலாந்தை வீழ்த்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *