ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்…. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்….!!!

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இணையும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய கஜினி, துப்பாக்கி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆகையால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய எம்.சரவணன் இயக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் அனிமேஷன் திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது அவர் எம்.சரவணன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார் எனும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *