கும்ப இராசிக்கு… “புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்”… இன்று செலவுகள் இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பண வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை  இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். இடமாற்றம் மேன்மையை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறுகள் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் வசூல் மட்டும் இன்று இருக்கும். வீண் அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரிடும்.

அதனால் வீண் அலைச்சல் இருக்கும். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர்கள் பணியை செய்வது போன்றவை உங்களுக்கு  இன்று தாராளமாக இருக்கும், அதனால் உடல் உழைப்பும் கொஞ்சம் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தாருடன் இன்று கலகலப்பாகவும் காண்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் முருகன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *