கும்ப இராசிக்கு… “மனம் மகிழும் சம்பவம் நடக்கும்”… வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர் களுக்காக இருந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். எல்லா வசதிகளும் இன்று உங்களுக்கு நல்லபடியாக கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக காண்பீர்கள். அதேபோல கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இன்று கூடும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள்.

அதனால் மனம் மகிழ்வாக இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து தைரியமாக எழுந்து நின்று கேட்டு சந்தேகத்தை தெரிந்துகொள்ளுங்கள். மாணவரிடம் கொஞ்சம் கடுமை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7  நபர்களுக்கு தயிர் சாதத்தை  அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் செல்வநிலை அதிகமாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி சந்தோசமாக காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 3

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *