ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர் மேலும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைகிறது

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிற வகுப்பு  மாணவர்களுக்கு  மூன்றாம் பருவ தேர்வு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார் .தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு  தேர்வை முடித்து விடுமுறை அளிக்க வேண்டும் என்ற நோக்கில்  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் 12-ம் தேதிக்குள்   அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த உத்தரவானது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களும்  செயல்படுத்துமாறு கல்வி துறை இயக்குனரால்  அறிவுறுத்தப்பட்டு உள்ளது மேலும் 2018-19 ஆம்  கல்வி ஆண்டின் கடைசி நாள் ஏப்ரல் 12ம் தேதி என்ற அறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் .