சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் விருதுகளை பெற விரும்புபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேபோல் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, நிர்வாகம், பண்பாடு, அறிவியல், கலை, போன்ற துறைகளில் தொடர்ந்து பணிபுரிந்து இருக்க வேண்டும். இதில் விருப்பமுடையவர்கள் தமிழக அரசின் இணையதள முகவரியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து அதன் இரண்டு நகல்கள் மற்றும் புகைப்படம் போன்றவற்றை சிவகங்கையில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply