ஆப்பிள் ஜாம் செய்வது இவ்வளவு ஈஸியா ….!!

சுவையான ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம் .

தேவையானபொருட்கள்:

ஆப்பிள் – 2

சர்க்கரை – 1கப்

லெமன் – 1/2 பழம்

தண்ணீர் – 1/2 கப்

தொடர்புடைய படம்

 

செய்முறை :

முதலில் ஆப்பிளை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி விடவேண்டும் .பின்  சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது  தண்ணீர் சேர்த்து  5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து  மசித்து விடவேண்டும் .பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் .பிறகு சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாமை  எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்க வேண்டும் . வழுக்கும் தன்மை வந்தவுடன் அடுப்பிலிருந்து  இறக்கி ஆறியதும் பரிமாறவும் .சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி .