பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் மிக அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பல்வேறு உலக தரம் வாய்ந்த வசதிகள் இருந்தாலும் அதற்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகும். அதிலும் ஐபோன் ஏதாவது சேதமடைந்து விட்டால் அதை சரி செய்வதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதன் காரணமாக பலர் ஐபோன் வாங்குவதற்கு மிகவும் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இனி மார்ச் 1 முதல் ஐபோன் பேட்டரி மாற்ற வேண்டும் என்றால் தற்போது இருக்கும் விலையை விட பல மடங்கு அதிகம் செலவாகும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
இதில் ஐபோன் 13 மற்றும் அதற்கு கீழ் இருக்கும் ஐ போன் மாடல்களுக்கு இனி பேட்டரி மாற்ற வேண்டும் என்றால் அதிக செலவாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஐபோன் பயனர்கள் மிகவும் பத்திரமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய பேட்டரி மாற்றுவதற்கான விலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் இறுதி வரை செல்லும் எனவும் அதன் பின் பேட்டரி மாற்ற வேண்டும் என்றால் புதிய விலை செலுத்த வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 1, 2023 -ஆம் ஆண்டு முதல் 20 டாலர் கூடுதலாக செலவாகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது 1,654 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
இது ஐபோன் 14 தவிர மற்ற அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். இந்த பேட்டரி மாற்றுவதற்கு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் 69 டாலர்கள் மதிப்பிடுகிறது. அதே சமயம் இந்தியாவில் 7,000 ரூபாயாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக நாம் ரூ.1,654 செலுத்தினால் இனி பேட்டரி மாற்ற அனைத்து வரிவிதிப்புகளும் சேர்ந்து ரூ.9000 விலை வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஏற்றமானது Apple care , Apple care+ திட்டத்தில் சேராத பயனர்களுக்கு மட்டுமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் அந்த Apple care திட்டத்தில் சேர்ந்தால் உங்களை இந்த விலையேற்றம் பாதிக்காது.
அதேபோல் இந்த Apple care +திட்டத்தில் சேர்ந்தால் உங்களுடைய ஐபோன் 80 சதவீத சார்ஜ் மேல் சார்ஜ் ஆகாமல் பிரச்சனை ஏற்பட்டால் இலவசமாக பேட்டரி மாற்றிக் கொள்ளலாம். அனைத்து ஐபோன்களும் வருடத்திற்கு ‘Hardware repair coverage’ மற்றும் 90 நாட்களுக்கு Technical உதவிகள் கிடைக்கும். மேலும் Apple care+மூலமாக கூடுதலாக இரண்டு வருடங்களுக்கு பாதுகாப்பு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாம் சேர்ந்து கொண்டால் நமக்கு ‘unlimited accidental damage protection’கிடைக்கும். அந்த வாரண்டி காலகட்டத்தில் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இதற்கு பழுது நீக்கம் சேவைக்காக ரூ.2500 செலுத்த வேண்டும். மேலும் முழு டேமேஜ் ஆனால் ரூ.8,900 செலுத்த வேண்டும். அதேபோல Macbook மற்றும் ipad போன்றவற்றிற்கும் பேட்டரி விலை அதிகரிக்கப்படும் என தெரிகிறது. Macbookair மாடலுக்கு 30 டாலர் விலையும் macbookbro பேட்டரி விலை 50 டாலர் மற்றும் ipad பேட்டரி விலை 20 டாலர் என அதிகரிக்கப்பட உள்ளது.