அப்பா திட்டிட்டாங்க… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கவுதம் வீட்டிலேயே இருந்ததால் எந்த நேரமும் செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருந்துள்ளார். இதனைப் பார்த்த கவுதமின் தந்தையான மதியழகன் இவ்வாறு எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருக்கிறாய் என்று அவரை திட்டியதோடு அதனை வாங்கி வைத்துக் கொண்டார். இதனால் கவுதம் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் கவுதம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் பெற்றோர் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறல் சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்த கவுதமை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு கவுதமிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கவுதமின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *