ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முழுமையாக வெளியேற உள்ளது. அதுவரை அன்றாடம் அங்கிருந்து வெளியேற தயாராக உள்ளவர்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழைத்து சென்று வருகின்றன. இந்நிலையில் ஒரே நாளில் அமெரிக்க ராணுவம் 30 ஆயிரம் ஆப்கானியர்களை விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளது.

ஏற்கனவே 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பொதுமக்களுடன் சேர்ந்து 10,000 தீவிரவாதிகளும், பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *